“வழக்குகளை திரும்பப் பெறுக” வரதராஜனுக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் ட்வீட்!

டிவி தொகுப்பாளர் வரதராஜன் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற கோரி திமுக தலைவர் ஸ்டாலின், தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டார்.
சென்னையில் கொரோனா சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக டிவி நடிகர் மற்றும் பத்திரிகையாளரான வரதராஜன் குற்றம் சாற்றி ஒரு விடியோவை வெளியிட்டார். இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்தார்.
அப்பொழுது அவர் கூறியதாவது, டிவி நடிகர், பத்திரிகையாளரான வரதராஜன் தெரிவித்த கருத்துக்கு மறுப்பு தெரிவித்ததோடு, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்நிலையில், வரதராஜன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், தொற்றுநோய் தடுப்பு சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம், வதந்தி பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் இதுகுறித்து அவரின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டார். அதில் அவர், “செய்தி வாசிப்பாளர் திரு. வரதராஜன் கொரோனா நிலவரம் குறித்து வீடியோவாக பதிவிட்டிருந்ததை பொறுக்க முடியாமல் வழக்குப் பதிவு செய்திருப்பது கண்டனத்திற்குரியது.
செய்தி வாசிப்பாளர் திரு. வரதராஜன் #Covid19 நிலவரம் குறித்து வீடியோவாக பதிவிட்டிருந்ததை பொறுக்க முடியாமல் வழக்குப் பதிவு செய்திருப்பது கண்டனத்திற்குரியது.
மிரட்டல் மூலம் உண்மைகளை மறைத்து விடலாம் என்ற எண்ணத்தை ஆட்சியாளர்கள் கைவிட வேண்டும்.
வழக்குகளைத் திரும்ப பெறுக!
— M.K.Stalin (@mkstalin) June 9, 2020
மிரட்டல் மூலம் உண்மைகளை மறைத்து விடலாம் என்ற எண்ணத்தை ஆட்சியாளர்கள் கைவிட வேண்டும்” என தெரிவித்த அவர், வரதராஜன் மீதான வழக்குகளைத் திரும்ப பெறுக என கோரிக்கை வைத்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!
March 12, 2025
நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!
March 12, 2025
அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?
March 12, 2025