தோனியை பற்றி கருத்து தெரிவித்த நியூஸிலாந்து அணியின் “மிஸ்டர் கூல்”
நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டனான கேன் வில்லியம்சன், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி குறித்தும், அவரின் கூலான கேப்டன்ஷிப் குறித்தும் பேசினார்.
நியூஸிலாந்து அணியின் கேப்டனான கேன் வில்லியம்சன், தனது கூலான கேப்டன்ஷிப் மூலம் பல கடினமான சூழலில் தனது அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்வார். இவர் சமீபத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி குறித்தும் அவரின் கூலான கேப்டன்ஷிப் குறித்தும் பேசினார்.
அப்பொழுது அவர் தோனி கவனத்தை சிதறடிக்கும் எந்தொரு விஷயத்தையும் செய்ய மாட்டார். எது முக்கியமோ அதை மட்டுமே நினைத்து, தீவிர கவனம் செலுத்துவார். அவர் தனிச்சிறப்பு வாய்ந்தவர் என தெரிவித்த அவர், 2003-2004 ஆம் ஆண்டு தோனியுடன் முதல் முதலாக தோனியுடன் வெளிநாட்டு தொடருக்கு சென்றேன்.
அப்பொழுது அவர் என்னுடன் மிக எளிதாக பழகினார். மேலும் தெரிவித்த வில்லியம்சன், தோனி மிக கூலானவர். ஏனெனில், அவர் கோபத்தை வெளிப்படுத்தி நான் அதிகம் பார்த்ததே இல்லை. அவரை அப்ப பார்த்ததற்கு, இப்ப பார்ப்பதற்கும் வெள்ளை முடி மட்டுமே தெரிவது மட்டுமே வித்தியாசம். மற்றபடி அவரின் குணங்கள் மாறவே இல்லை. மேலும், அவர் கூலாகவே இருக்கிறார் என தெரிவித்தார்.