ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இருக்குறது ஓபிஎஸ்ஸுக்கும், ஈபிஎஸ்ஸுக்கும் இருக்கா?

Default Image

மு.க.ஸ்டாலின் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இருக்கும் உணர்வு ஈபிஎஸ், ஓபிஎஸ்-க்கு இல்லை என்று  தெரிவித்துள்ளார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பிரதமர் மோடி அளித்த எந்தவொரு உறுதிமொழியையும், வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை, எனவே, இந்தக் கூட்டணியில் இருப்பது முறையல்ல என்பதை அவர் ஏற்கனவே உணர்ந்து கொண்ட காரணத்தினால் தான், அவருடைய கட்சியில் சார்பில் மத்திய அமைச்சர்களாக பொறுப்பில் இருந்தவர்கள், பதவி விலகியிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, பாஜகவுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாகவும் அறிவித்து இருக்கிறார்கள். இந்த உணர்வு, தமிழ்நாட்டில் உள்ள ஓபிஎஸ்ஸுக்கும், ஈபிஎஸ்ஸுக்கும் வரவில்லையே என்பது வேதனையாக இருக்கிறது.

ஏனெனில், காவிரி விவகாரத்தில் மத்திய பாஜக அரசு தமிழக மக்களை வஞ்சித்துக் கொண்டிருக்கிறது, நீட் பிரச்னையில் எத்தனை மோசமாக நடந்து கொள்கிறது. என்பதையெல்லாம் சூடு, சுரணையோடு தட்டிக் கேட்க வகையற்ற, வழியற்ற, அருகதையற்ற, யோக்கியதையற்றதாக, இன்றைக்கு குதிரை பேர ஆட்சி நடக்கிறது. எனவே, ஆந்திர மாநில நிலையை பார்த்தாவது இவர்கள் திருந்துவார்களா, உணர்ந்து கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கு முன்  ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்குதேசம் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும் நிலையில், அதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட 7 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதற்கு, தெலுங்கு தேசம் கட்சியும், ஒய்எஸ்ஆர் காங்கிரசும் மக்களவை செயலாளரிடம் நோட்டீஸ் அளித்துள்ளன. இந்நிலையில், மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்பதாக காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, ஆம் ஆத்மி, ஏஐஎம்ஐஎம் ஆகிய 7 கட்சிகள் அறிவித்துள்ளன. 2014 பொதுத்தேர்தலுக்குப் பிறகு மக்களவையில் 282 ஆக இருந்த பாஜக-வின் பலம், இடைத்தேர்தல்களுக்குப் பிறகு 273 ஆகக் குறைந்துள்ளது.

மக்களவையில் பெரும்பான்மை பலத்திற்கு 272 எம்.பி.க்கள் தேவை என்ற நிலையில், சபாநாயகரையும் சேர்த்து பாஜக-வின் பலம் 274 ஆக உள்ளது. அதன் கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம், ஆர்எல்எஸ்பி, எல்ஜேபி, சிரோன்மணி அகாலிதளம், அப்ணா தளம் ஆகிய கட்சிகளுக்கு 17 எம்.பி.க்கள் உள்ளனர். எனவே நம்பிக்கையில்லா தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டாலும் மத்திய அரசுக்கு சிக்கல் இல்லை. அதேசமயம், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும் தெலுங்குதேசம் கட்சிக்கு 16 இடங்களும், ஒய்எஸ்ஆர் காங்கிரசுக்கு 9 இடங்களும் உள்ளன.

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள காங்கிரசுக்கு 48 இடங்களும், திரிணமூல் காங்கிரசுக்கு 34 இடங்களும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதிக்கு 11 இடங்களும், மார்க்சிஸ்ட் கட்சிக்கு 9 இடங்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு இடமும், ஆம் ஆத்மி கட்சிக்கு 4 இடங்களும் உள்ளன. பாஜக மீது கடும் அதிருப்தியில் உள்ள சிவசேனா கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்தால் அக்கட்சிக்கு 18 எம்.பி.க்கள் உள்ளனர். இதுதவிர அதிமுக-வுக்கு 37 இடங்களும், பிஜு ஜனதா தளத்திற்கு 20 இடங்களும், சமாஜ்வாதிக் கட்சிக்கு 5 இடங்களும், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் 6 இடங்களும் உள்ளன. 5 மக்களவை இடங்கள் காலியாக உள்ளன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்