விபத்தில் சிக்கிய அமெரிக்க இராணுவ விமானம்..33 வீரர்களின் நிலைமை என்ன?
ஈராக் தலைநகரில் உள்ள இராணுவ தளத்தில் அமெரிக்க இராணுவ விமானம் விபத்துக்குள்ளானதாக அமெரிக்க தலைமை படை தெரிவித்துள்ளது.
ஈராக்கின் தாஜி முகாமில் அமெரிக்கா இராணுவத்தின் சி-130 விமானம் விபத்துக்குள்ளானதில் நான்கு வீரர்கள் காயமடைந்தனர், இது ஒரு விபத்து என்று கருதப்படுவதாக அமெரிக்க தலைமை மைல்ஸ் காகின்ஸ் தெரிவித்தார். விமானம் பாதையை தவறிவிட்டு சுவரில் மோதியதால் விமானம் சேதமடைந்து சிறிய தீ விபத்து ஏற்பட்டதாக காகின்ஸ் கூறினார். விமானத்தில் இருந்த நான்கு வீரர்கள் காயமடைந்தனர், அவர்களது உயிருக்கு ஒன்றும் ஆபத்து இல்லை அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார்.
எதிரிகளின் செயல்பாடு இருப்பதாக சந்தேகப்படவில்லை, இச்சம்பவம் விசாரணையில்இருக்கிறது என காகின்ஸ் தெரிவித்துள்ளார். விமானத்தில் 7 பணியாளர்கள் மற்றும் 26 பயணிகள் உள்ளெ இருந்தார்கள் என ஈராக் அதிகாரி தெரிவித்தார்.
Video .. The first shots of the US military plane that crashed at Taji base, north of Baghdad pic.twitter.com/NEWNGUy33v https://t.co/7Ifl6k6YgG
— Suat Kılıçtaş (@Suatklcts) June 9, 2020