மராட்டியத்தில் இருந்து வருபவர்களுக்கு 7 நாட்கள் தனிமை போதும் – கர்நாடக அரசு
மராட்டியத்தில் இருந்து வருபவர்களுக்கு 7 நாட்கள் தனிமை போதும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுபடுத்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள 5-ம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது, வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் உள்ளவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வரும் நபர்கள் 7 நாட்கள் மட்டும் அரசு தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்தால் போதுமானது என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
மேலும், மகாராஷ்டிராவை தவிர பிற மாநிலங்களில் இருந்து வருபவர்கள், கட்டாயம் 14 நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.