ஆரோக்கியம் போச்சுன்னா.. வாழ்க்கையே போச்சு.! ரஜினிகாந்த் .!

Default Image

ஆரோக்கியம் போச்சுன்னா வாழ்க்கையே போச்சு என ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் அறிவுரை.

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், தன்னார்வலர்கள், அரசியல் கட்சியை சார்ந்தவர்கள், பிரபலங்கள் என பலர் தங்களால் முடிந்த உதவிகளை  ஏழை, எளிய மக்களுக்கு செய்து வருகின்றன. இந்நிலையில், ஏழை எளிய மக்களுக்கு  உதவிய , ரஜினி மக்கள் மன்ற  நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை ரஜினி  வெளியிட்டுள்ளார்.

அதில்,  ஆரோக்கியம் போச்சுன்னா வாழ்க்கையே போச்சு. கொரோனா எனும் அடி சாதாரணமானது அல்ல. வல்லரசு நாடுகளையே கதிகலங்க வைத்திருக்கும் அசுர அடி. ரசிகர்கள் தங்கள் குடும்பத்தினரின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்து பாதுகாப்பதே அடிப்படை கடமை.  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வரும் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு பாராட்டு என ரஜினிகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்