பிடிவாதம், வறட்டு கெளரவம் விட்டு மாணவர்கள் எதிர்பார்க்கும் முடிவை எடுங்கள்- ஸ்டாலின் .!
பிடிவாதம், வறட்டு கெளரவம், மாறாப் போக்கை விடுத்து மக்களும், மாணவர்களும் எதிர்பார்க்கும் முடிவை எடுங்கள் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக இன்று மீண்டும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
#10thPublicExam குறித்து இன்று மதியம் @CMOTamilNadu தலைமையில் ஆலோசனை நடப்பதாக அறிகிறேன். பிடிவாதம், வறட்டு கெளரவம், மாறாப் போக்கை விடுத்து
மக்களும், மாணவர்களும் எதிர்பார்க்கும் முடிவை எடுங்கள்! முடிவில் மாணவர் எதிர்காலம் மட்டுமல்ல மாநிலத்தின் எதிர்காலமும் அடங்கி இருக்கிறது!— M.K.Stalin (@mkstalin) June 9, 2020
இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து தலைமையில் ஆலோசனை நடப்பதாக அறிகிறேன். பிடிவாதம், வறட்டு கெளரவம், மாறாப் போக்கை விடுத்து மக்களும், மாணவர்களும் எதிர்பார்க்கும் முடிவை எடுங்கள்.! முடிவில் மாணவர் எதிர்காலம் மட்டுமல்ல மாநிலத்தின் எதிர்காலமும் அடங்கி இருக்கிறது.! என பதிவிட்டுள்ளார்.