காஷ்மீர் எல்லையில் மீண்டும் அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவம்..!
ஜம்மு-காஷ்மீர் எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதால், அதற்க்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது.
சமீப காலமாக போர் நிறுத்த ஒப்பந்தக்களை மீறி எல்லையில் ராணுவ நிலைகள் மற்றும் கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தரப்பில் தாக்குதல் நடத்துவது அதிகமடைந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தரப்பில் உரிய பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், காஷ்மீர் எல்லைக்கு அருகே உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் மன்கோட் பிரிவில் இன்று காலையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதனைதொடர்ந்து, இந்திய ராணுவமும் பாகிஸ்தான் பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பொதுமக்கள், ராணுவ வீரர்கள் யாரும் காயமடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.