மீண்டும் பரிதாப சம்பவம்.. அடுத்த யானை உயிரிழப்பு.?

Default Image

மலப்புரம் மாவட்டம் வனப்பகுதியில் வாய் மற்றும் வயிற்றில் காயங்களுடன் காட்டு யானை ஒன்று இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மலப்புரம் மாவட்டம் கருவரக்குண்டு வனத்தை ஒட்டிய இப்பகுதியில் கடந்த வாரம் ஒரு காட்டு யானை ஊருக்குள் திடீரென வந்தது இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர் , மேலும் விரட்ட முயன்றனர் ஆனால் யானை அங்கிருந்து செல்ல மறுத்தது இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிந்து உடனே விரைந்து வந்து யானையை காட்டுக்குள் விரட்ட முயற்சித்தனர் ஆனால் அது காட்டுக்குள் செல்லாமல் அடம்பிடித்தது .

இந்த நிலையில் இதனையடுத்து வனத்துறையினர் அதைக் கூர்ந்து கவனித்தபோது வாய் மட்டும் வயிற்றில் காயங்கள் காணப்பட்டன இதனையடுத்து யானைக்கு வனத்துறை டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர், தொடர்ந்து யானையின் உடல்நிலை முன்னேற்றம் காணப்பட்டது மேலும் நேற்றுமுன்தினம் முதலில் யானை தண்ணீர் குடிக்க தொடங்கியது இந்த நிலையில் நேற்று காலை அந்த யானை நின்று கொண்டு இருந்த இடத்திலேயே இறந்து கிடந்தது , மேலும் யானை எப்படி இருந்தது என்பது பற்றி வனத்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்