ஆவடி மாநகராட்சியில் ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 3 பேர் உயிரிழப்பு!

ஆவடி மாநகராட்சியில் ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால், 33,229 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 286 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், ஆவடி மாநகராட்சியில், ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், ஆவடியில் ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஆவடியில், கொரோனா பாதிப்பு 282 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs SRH : தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு!
April 25, 2025
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025