#BREAKING: தெலுங்கனாவில் 10-ம் வகுப்பு தேர்வு ரத்து.! ஆல் பாஸ் அறிவிப்பு .!
தெலங்கானாவில் 10-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு .
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், பள்ளிமற்றும் கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் 10-ம் வகுப்பு மாணவர்கள் நடைபெறாமல் உள்ளது.
இந்நிலையில், தெலுங்கனா மாநிலத்தில் பொதுத்தேர்வு இல்லாமல் 10-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் செய்யப்பட்டு அடுத்த வகுப்புக்கு அனுப்பப்படுவார்கள் என அம்மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக தற்போது தேர்வு நடத்த முடியாத சூழல் உள்ளதால் அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்தார்.