ஜேம்ஸ் பாண்ட்’ படத்தை இயக்கும் ஸ்லெம்டாக் மில்லியனர்
இந்தப் படத்தை `ஸ்லெம்டாக் மில்லியனர்’, `127 ஹவர்ஸ்’ போன்ற படங்களை எடுத்த டேனி பாயல் இயக்குகிறார். “படத்துக்கான ஸ்க்ரிப்ட் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. தற்போது ரிச்சர்ட் கர்ட்ஸ் எழுதியிருக்கும் கதையின் வேளைகளில் இருக்கிறேன் அதன் படப்பிடிப்பு ஆறு வாரங்களில் துவங்க உள்ளது. ஜேம்ஸ் பாண்ட் படம் இவ்வருட இறுதியில் துவங்கும் என நினைக்கிறேன். தற்போது இந்த இரண்டு வேலைகளிலும் கவனம் செலுத்திவருகிறேன்” எனக் கூறியிருக்கிரா டேனி பாயல்.
`கேசினோ ராயல்’, `க்வாண்டம் ஆஃப் சோலேஸ்’, `ஸ்கைஃபால்’, `ஸ்பெக்டர்’ படங்களில் பாண்டாக நடித்த டேனியல் க்ரைக்தான் `பாண்ட் 25’யிலும் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரசிகர்கள் இப்போதிருந்தே பாண்ட் கேர்ளாக யார் நடிப்பார் என யோசனையில் இருக்கிறார்கள்.