10ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்த ‘காதலில் விழுந்தேன்’ ஜோடியின் அடுத்த படத்தின் டீசர்.!

Default Image

நகுல் மற்றும் சுனைனா நடிப்பில் உருவாகி வரும் எரியும் கண்ணாடி படத்தின் டீசர் வைரலாகி வருகிறது.

2008ல் நகுல் நடித்த காதலில் விழுந்தேன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சுனைனா. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதை அடுத்து, அடுத்த ஆண்டில் அவருடன் மாசிலாமணி படத்திலும் நடித்தார். அதனையடுத்து தமிழ் சினிமாவில் அறியப்படும் கதாநாயகனாகவும், கதாநாயகியாகவும் திகழ்ந்த இவர்கள் தற்போது 10 வருடங்கள் கழித்து மீண்டும் இணைகின்றனர்.

சச்சின் தேவ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘எரியும் கண்ணாடி’ படத்தின் மூலம் நகுல் மற்றும் சுனைனா இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர். தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ரொமான்டிக் காட்சிகள் அடங்கிய எரியும் கண்ணாடி படத்தின் டீசர் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. மேலு‌ம் மீண்டும் இணையும் இந்த ஜோடியினை பார்க்க ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Rajinikanth -Manmohan singh
pays last respects to former PM Dr Manmohan Singh
Manmohan Singh's net worth
Former PM Manmohan singh
Gold Rat
BJP State president Annamalai Protest