இத்தாலியை பின்னுக்கு தள்ளிய இந்தியா – கொரோனா பாதிப்பில் 6 வது இடம்!
கொரோனா பாதிப்பில் நாளுக்கு நாள் அதிகரிப்பில் இத்தாலியை பின்னுக்கு தள்ளி இந்தியா ஆறாவது இடம்.
உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை 68 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பிய நாடுகள் தான் கொரோனா பாதிப்பு கொண்ட 10 நாடுகளில் அதிகம் இடம் பெற்றிருந்தது.
ஆனால், இந்தியா ஐரோப்பிய நாடுகளையே முந்தி சென்று கொண்டுள்ளது. இதுவரை இந்தியாவில் 236,184 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 6,649 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஒரே நாளில் 7 ஆயிரம் அதிகரித்து இந்தியா இத்தாலியை விட முன்னுக்கு வந்து கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட 10 நாட்குளில் 6 வது இடத்தில உள்ளது.