கோவை வந்த ராணுவ வீரர் மதியழகன் உடல்.!
ராணுவ தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர் மதியழகன் உடல் தனி விமானத்தின் மூலம் கோவை சூலூர் விமானப்படைத்தளத்திற்கு வந்தது.
காஷ்மீரில் இந்தியா, பாகிஸ்தான் ராணுவத்திற்கிடையில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த வெத்தலைகாரன் காடு கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் மதியழகன் வீரமரணம் அடைந்தார். இவர் 1999 ஆண்டு ராணுவத்தில் சேர்ந்த இவர் கடந்த 21 ஆண்டுகளாக இந்திய இராணுவத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில், ராணுவ தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர் மதியழகன் உடல் தனி விமானத்தின் மூலம் கோவை சூலூர் விமானப்படைத்தளத்திற்கு வந்தது. பின்னர் விமானப் படைத்திலிருந்து மதியழகன் உடல் சாலை வழியாக சேலம் எடப்பாடி கொண்டு செல்லப்பட்டது.