சிவகங்கையில் கொரோனா வார்டை சுத்தம் செய்யும் போது பிடிபட்ட விஷ பாம்புகள் ! அச்சத்தில் மக்கள் !
சிவகங்கையில் கொரோனா வார்டை சுத்தம் செய்யும் போபிது டிபட்ட விஷ பாம்புகள்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, கொரோனா வைரஸால் பாதிக்கபட்ட மக்களை தனி கவனம் செலுத்தி, மருத்துவர்கள் கவனித்து வருகிற நிலையில், அவர்கள் அனுமதிக்கப்படும் மருத்துவமனைகளும் சுத்தமாக இருப்பதில் முழு செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சிவகங்கை மருத்துவக்கல்லூரியில், பழைய தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள, கொரோனா வார்டின் சுற்றுவட்டார பகுதிகளில் சுத்தம் செய்யம் பணி நடைபெற்றுள்ளது. அப்போது, அங்கு 10-க்கும் மேற்பட்ட விஷ பாம்புகள் பிடிப்பட்ட நிலையில், அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர்.