இந்த ஆண்டிற்கான ஹஜ் பயணம் ரத்து – ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர்

Default Image

ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர், இந்த ஆண்டுக்கான ஹஜ் பயணம் ரத்து செய்யப்படுவதாக  அறிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிற நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால், இதுவரை உலக அளவில் 6,871,859 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 398,666 பேர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும், இந்த வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே தான் உள்ளது. 

இந்நிலையில்,  ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர், இந்த ஆண்டுக்கான ஹஜ் பயணம் ரத்து செய்யப்படுவதாக  அறிவித்துள்ளார். சவுதி அரேபியா அரசிடம் இருந்து உறுதியான தகவல் கிடைக்கப் பெறாததால் ஹஜ் பயணம் ரத்து செய்யப்படுவதாகவும், ஹஜ் பயணத்திற்கு தேர்வாகி பணம் செலுத்தியோர் முழு தொகையையும் திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்றும் அபுபக்கர் தெரிவித்துள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்