மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை தமிழக அரசே ஏற்கும் – முதல்வர் அறிவிப்பு
தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த நேத்ராவிற்கு முதலமைச்சர் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
மதுரை அண்ணா நகரை சேர்ந்த சலூன்கடைக்காரர் மோகன் மகள் மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை தமிழக அரசே ஏற்கும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். கல்வி செலவுக்காக வைத்திருந்த ரூ.5 லட்சத்தை ஏழை மக்களுக்காக உதவி இருப்பது பாராட்டுக்குரியது. தன்னலம் கருதாமல் அர்ப்பணிப்புடன் செயல்படும் நேத்ராவின் செயலை அங்கீகரிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த நேத்ராவிற்கு முதலமைச்சர் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு பிரதமர் பாராட்டை பெற்றவர் நேத்ரா என்றும் தன்னலமற்ற செயலை பாராட்டி ஐ.நா.வால் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டார். இதனிடையே, பிரதமர் மோடி’மான் கி பாத்’ நிகழ்ச்சியில் மதுரையை சேர்ந்த முடிதிருத்தும் தொழில் செய்யும் மோகன் மற்றும் அவரது மகள் நேத்ராவை பாராட்டி பேசியுள்ளார். இதையடுத்து, மோகனின் மகள் நேத்ராவை ஏழைகளுக்கான நல்லெண்ண தூதராக ஐ.நா சபை அறிவித்தது. மேலும், இவருக்கு, ஊக்கத் தொகையாக ஒரு லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.