அமெரிக்காவை விடாமல் விரட்டும் கொரோனா வைரஸ்! நாளுக்குநாள் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!
அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் விபரம்.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளை தாக்கி வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தின் தீவிரம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிற நிலையில், இதனை அழிப்பதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில், உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளது.
இந்நிலையில், இந்த வைரஸ் தாக்கத்தால் இதுவரை உலக அளவில், 6,844,838 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 398,147 பேர் உயிரிழந்துள்ளனர். வல்லரசு நாடான அமெரிக்காவில் இதுவரை கொரோனா வைரசால், 1,965,708 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 111,390 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று மட்டும் அமெரிக்காவில், இந்த வைரஸ் தாக்கத்தால், 975 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.