ATP சேலஞ்சர் இறுதிச்சுற்றில் ஜப்பான் வீரரிடம் படுதோல்வி அடைந்தார் இந்தியாவின் ராம்குமார்.
வினெட்கா ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் ஜப்பான் வீரரிடம் இந்திய வீரர் ராம்குமார் படுதோல்வி அடைந்தார்.
வினெட்கா ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் வினெட்காவில் நேற்று நடைபெற்றது.
இதன் இறுதிச் சுற்றில் இந்தியாவின் ராம்குமார் மற்றும் ஜப்பானின் அகிரா சான்டிலன் அதிரடியாக மோதினார்.
விறுவிறுப்பாக நடைப்பெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட் கணக்கில் 6-7 (1) என்ற விகிதத்தில் ராம்குமார் பின்தங்கி இருந்தார்.
அடுத்த செட்டில் முன்னேறிவிடலாம் என்று முனைப்போடு விளையாட ஆரம்பித்த் ராம்குமாரின் பந்துகள் அனைத்தையும் எளிதில் முறியடித்தார் சான்டிலன்.
இரண்டாவது செட்டிலும் 2-6 என்ற செட்களில் முன்னேறி ராம்குமாருக்கு தோல்வியளித்தார் ஜப்பானின் அகிரா சான்டிலன்.