நம்ம ஹன்சிகா வா இது..? வைரல் புகைப்படம்
நடிகை ஹன்சிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்
தமிழ் சினிமாவில் தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. அதனையடுத்து பல முன்னணி ஹீரோகளுடன் நடித்த இவர் தமிழில் காணாமல் போய் விட்டார் என்றே கூறலாம். இந்த நிலையில் தற்போது இவர் மஹா என்னும் திரைப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் இவருடைய உடல் எடையை குறைத்து தற்போது ஒட்டு மொத்தமாக மாறியது அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில் தற்போது ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையில் பல பிரபலங்கள் ஜாலியான வீடியோக்களையும், பழைய புகைப் படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். தற்போது நடிகை ஹன்சிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
View this post on InstagramSelf confidence is the best outfit one can wear.???? • • • #virtualphotoshoot with @soondah_wamu