புதிய ரெக்கார்டை கைவசமாக்கிய சூர்யா.! ரசிகர்கள் கொண்டாட்டம்.!
சூர்யாவின் பிறந்தநாளிற்கு மூன் கூட்டியே உருவாக்கிய ஹேஷ்டேக்கை புதிய ரெக்கார்டை செய்துள்ளது.
சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர். இவர் தற்போது நடித்து வரும் திரைப்படம் சூரரை போற்று. இப்படத்தை சுதா கோங்குரா இயக்குகிறார். மேலும் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் சம்பத் ராஜ், கருணாஸ், ஜாக்கி ஷ்ரூஃப் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் டீசரும், டிரைலரும் ரசிகர்கள் இடையில் நல்ல வரவேற்பையே பெற்றிருந்தது. நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் மற்றும் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கும் இந்த படத்தை தீபாவளி முன்னிட்டு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும், ஹரியின் அருவா படத்திலும், கே. வி. ஆனந்த் இயக்கத்தில் அயன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் கமிட்டாகியுள்ளார் என்று கூறப்படுகிறது.
அடுத்த மாதம் தனது பிறந்த நாளை கொண்டாடும் சூர்யாவிற்கு, அவரது ரசிகர்கள் இப்போதே ஹேஷ்டேக்கை உருவாக்கி நாட்களை எண்ணி வருகின்றனர். அந்த வகையில் அவரது ரசிகர்கள் #SuriyaBdayFestin50Days என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்டிங்கில் உள்ளது. இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி 24 மணி நேரத்தில் 2.22 மில்லியன் டூவிட்களை செய்து சாதனை படைத்துள்ளது. மேலும் கோலிவுட்டில் பிறந்தநாளிற்கு முன்னரே உருவாக்கிய ஹேஷ்டேக் இவ்வாறு ஒரு சாதனை படைத்து ரெக்கார்ட் செய்வது முதல் முறையாகும்.