உலக கோப்பை ஹாக்கியில் இந்திய பெண்கள் ஏமாற்றம்
ஜோகனஸ்பர்க்: பெண்களுக்கான உலக ஹாக்கி லீக் அரையிறுதி சுற்று, லீக் போட்டியில் இந்திய அணி 0-3 என அர்ஜென்டினாவிடம் வீழ்ந்தது.
தென் ஆப்ரிக்காவில் உள்ள ஜோகனஸ்பர்க் நகரில், பெண்களுக்கான உலக ஹாக்கி லீக் அரையிறுதி சுற்று, நடக்கிறது. இதில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்திருந்த இந்திய அணி, தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியை ‘டிரா’ செய்தது. இரண்டாவது போட்டியில் அமெரிக்காவிடம் வீழ்ந்த இந்தியா, மூன்றாவது போட்டியில் சிலியை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது.
நான்காவது லீக் போட்டியில் இந்தியா, அர்ஜென்டினா அணிகள் மோதின. இதில் இந்திய அணி 0-3 என தோல்வி அடைந்தது. இதனையடுத்து ‘பி’ பிரிவு புள்ளிப்பட்டியலில் ஒரு வெற்றி, ஒரு ‘டிரா’, இரண்டு தோல்வி என 4 புள்ளிகள் பெற்ற இந்தியா, 4வது இடம் பிடித்தது. முதல் மூன்று இடங்களை முறையே அர்ஜென்டினா (12 புள்ளி), அமெரிக்கா (6), தென் ஆப்ரிக்கா (4) அணிகள் கைப்பற்றின.
காலிறுதியில் (ஜூலை 18) இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன