குஜராத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தொடர்ந்து 3 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா.!

Default Image

குஜாராத் மாநிலத்தில் நேற்று 2 எம்எல்ஏக்கள் பதவி விலகிய நிலையில், இன்று மேலும் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

குஜராத்தில் 4 மாநிலங்களவை பதவிகள் காலியாகின்றன. இவற்றுக்கு வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று அம்மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் அக்ஷ்ய் படேல் மற்றும் ஜித்து சவுத்ரி ஆகியோர் முதல்வர் ரூபானியை சந்தித்த பின்னர், நேராக சட்டப்பேரவை சபாநாயகர் ராஜேந்திரா திரிவேதியை சந்தித்து பேசினர். அதைத்தொடர்ந்து பேட்டி அளித்த அவர்கள், தங்களுடைய பதவியை ராஜினாமா செய்வதாகவும், அதற்கான கடிதத்தை சபாநாயகரிடம் அளித்ததாகவும் கூறினர்.

இதனையடுத்து உடனடியாக சபாநாயகர் அவர்களது ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டு தகவலை தெரிவித்தார். குஜராத்தில் மொத்தமுள்ள 182 சட்டசபை உறுப்பினர்களில், பாஜ.விற்கு 103 உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சிக்கு 68 உறுப்பினர்களும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று நேற்று 2 எம்எல்ஏக்கள் பதவி விலகிய நிலையில், இன்று மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலில் அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்