கீழடியில் நடைபெற்று வரும் 6ஆம் கட்ட அகழாய்வு.. பெரிய விலங்கின் எலும்புக்கூடுகள் கண்டு பிடிப்பு!
கீழடியில் தற்பொழுது நடைபெற்று வரும் 6ஆம் கட்ட அகழாய்வில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பெரிய விலங்கின் எலும்பு கூடுகளை கண்டுபிடித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், கீழடியில் த 5 ஆம் கட்ட அகழாய்வு நடந்து முடிந்த நிலையில், தற்பொழுது 6 ஆம் கட்ட அகழாய்வு தொடங்கியது. இந்த ஆறாம் கட்ட அகழாய்வு கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் என தெரிவித்த நிலையில், அதற்கான பணிகளும் நடைபெற்று வந்தன. மார்ச் 24-ம் தேதி கொரோனா வைரஸ் தாக்கத்தால், அகழாய்வு இடங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
இந்நிலையில், மே 22-ம் தேதி முதல் மீண்டும்பணிகள் தொடங்கப்பட்டது. தற்பொழுது அகழாய்வு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கீழடியில் ஒரு குழி தோண்டும்போது, பெரிய விலங்கின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், அந்த எலும்பு, சுமார் 3 மீட்டர் அளவில் இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.