விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!குடிநீர் பாட்டிலில் வெடிகுண்டு?
சென்னைக்கு ஹைதராபாத்தில் இருந்து வரும் விமானங்களில் ஒன்றில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு நாள்தோறும் 2 ஏர் இண்டியா விமானங்கள், 9 இன்டிகோ விமானங்கள், 3 ஜெட் ஏர்வேஸ் விமானங்கள், 4 ஸ்பைஸ் ஜெட் விமானங்கள், 3 க்ரூ ஜெட் விமானங்கள் உட்பட 20 விமான சேவைகள் உள்ளன.
இந்நிலையில் இன்று காலை சென்னை விமான நிலைய அதிகாரிகளைத் தொடர்பு கொண்ட ஹைதராபாத் விமான நிலைய அதிகாரிகள், ஹைதரபாத்தில் இருந்து சென்னை வரும் விமானம் ஒன்றின் தண்ணீர் கேனில் வெடிகுண்டு இருப்பதாக தங்களுக்கு மிரட்டல் வந்ததாகத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து தாங்கள் முழுமையான முன்னெச்சரிக்கை மற்றும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும், சென்னை விமான நிலைய அதிகாரிகளும் எச்சரிக்கையாக இருக்குமாறு அவர்கள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து சென்னை விமான நிலைய அதிகாரிகளும், பாதுகாப்பு அதிகாரிகளும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் சென்னை வரவுள்ளதால், சென்னை விமான நிலையத்தில் தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.