வெளிநாடு மருத்துவ நிபுணர்கள் இந்தியா வர மத்திய அரசு அனுமதி!
வெளிநாட்டு தொழிலதிபர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் சிறப்பு விமானங்கள் மூலமாக இந்தியா வருவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
கொரோனா அச்சத்தால் வெளிநாட்டு விமான சேவைகளுக்கு மத்திய அரசு தடை விதித்த நிலையில், தற்பொழுது வெளிநாட்டு தொழிலதிபர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் சிறப்பு விமானங்கள் மூலமாக இந்தியா வருவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக சிறப்பு விசாக்கள் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.