அடுத்த ரஜினி கமல் பாணியில் டிடிவி தினகரன்!
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியதில், தமிழகத்தில் முதல்வராக வேண்டும் என்ற கனவுடன் பலர் கட்சி துவங்குகின்றனர்.டிடிவி தினகரனும் ரஜினி, கமல், வரிசையில் தற்போது புதிய கட்சி துவங்குகிறார். ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக 3 அணிகளாக உடைந்தது. இதில் எடப்பாடி பழனிசாமி அணியையும், பன்னீர்செல்வம் அணியையும் பிரதமர் மோடி பஞ்சாயத்து செய்து இணைத்து வைத்துள்ளார். ஆனால், இவர்கள் இணைந்தாலும் கருத்து வேறுபாடுகள் இன்னும் இருந்து வருகின்றன.
புதிய கட்சி துவங்குபவர்கள் தங்களுக்கு சாதகமாக தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளதாகக் கூறுகின்றனர். தமிழக அரசியலில் மட்டுமல்ல இயற்கையிலேயே வெற்றிடம் என்பதே கிடையாது.மக்கள் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வேண்டும் என்று ஓட்டுப்போடவில்லை. ஜெயலலிதாவிற்காகதான் ஓட்டு போட்டனர். அதே போல் மக்களிடம் கருத்து கேட்டோ, அதிமுக தொண்டர்களின் கருத்து கேட்டோ எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைக்கவில்லை. எனவே 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் கோர்ட் தீர்ப்பு வந்ததும் ஆட்சி தானாகவே கலைந்து விடும். தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணி நீடிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.