நிச்சயதார்த்தம் முடிந்த கோப்ரா பட நடிகையின் வருங்கால கணவர் இவர்தான்.!

Default Image

கோப்ரா படத்தில் நடிக்கும் பிரபல நடிகை மியா ஜார்ஜின் வருங்கால கணவரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது

மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மியா ஜார்ஜ். இவர் தமிழில் ஆர்யாவின் சகோதரர் நடிப்பில் வெளியான அமரகாவியம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து விஷ்ணு விஷாலுடன் இன்று நேற்று நாளை, சசிக்குமாருடன் வெற்றிவேல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இவரது பெற்றோர்கள் அஸ்வின் என்ற தொழிலதிபரை இவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து, சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைப்பெற்றதாகவும், கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததும் திருமணத்தை செப்டம்பரில் வைக்க முடிவு செய்துள்ளதாகவும் மியா ஜார்ஜின் குடும்ப தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது மியா ஜார்ஜின் வருங்கால கணவரான அஸ்வின் பிலிப்புடன் இணைந்துள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்