மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி! தங்கத்தின் விலை குறைந்தது!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது.
மக்களை பொறுத்தவரையில், இன்று பலரும் தங்களது பணத்தை தங்கத்தில் தான் முதலீடு செய்கின்றனர். ஆனால், இந்த தங்கத்தின் விலை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.
இந்நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது. இதனையடுத்து ஒரு சவரன் ஆபரண தங்கம், ரூ.35,744-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், தங்கத்தின் கிராமிற்கு ரூ.30 குறைந்து ரூ.4,468-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.53.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.