சாகும் போது கூட செல்பி எடுத்து காரணமான காதலரை காண்பித்து கொடுத்த சீரியல் நடிகை.!

Default Image

 பிரபல டிவி சீரியல் நடிகையான சந்தனா விஷம் குடித்து தற்கொலை செய்கின்ற போது, தனது காதலர் தான் எனது மரணத்திற்கு காரணம் என்று கூறி செல்பி வீடியோ ஒன்றை எடுத்துள்ளார். 

சந்தானா, பெங்களூரை சேர்ந்த இவர் பல கன்னட சீரியல்களில் நடித்து பிரபலமானவர். இவர் தினேஷ் என்பவரை காதலித்து வந்ததை அடுத்து, திருமணம் செய்து கொள்ளுமாறு தினேஷை வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் தினேஷ் பல காரணங்களை காட்டி பின் மாறியுள்ளார். இதனையடுத்து  இவர்களது காதல் விவகாரத்தை அறிந்த சந்தனா குடும்பத்தினர் திருமணம் குறித்து பேச தினேஷை அணுகியதாகவும், ஆனால் அவர் சந்தனாவை தரக்குறைவாக பேசியதோடு, சந்தனாவை திருமணம் செய்து கொள்ள இயலாது என்றும் கூறியுள்ளார். 

இதனால் மனமுடைந்த சந்தனா விஷம் குடித்துள்ளார். இதனை கண்ட குடும்பத்தினர் சந்தனாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர்  அதற்கு முன்னரே உயிரிழந்து விட்டார். இதனை குறித்து போலீசார் விசாரணை நடத்திய  போது சந்தனாவின் வீடியோ ஒன்று கையில் சிக்கியது. அதில் கையில் விஷப் பாட்டிலை வைத்து கொண்டு எனது மரணத்திற்கு காரணம் தினேஷ் தான் என்றும், அவர் என்னிடம் உள்ள பணத்தையே விரும்பினார் என்றும் பல்வேறு உண்மைகளை கூறி செல்பி வீடியோ ஒன்றை எடுத்துள்ளார். அதனையடுத்து போலீசார் தற்போது தினேஷ் என்பவரை தேடி வருகின்றனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்