மொபைல் போன் உற்பத்தியில் இந்தியா சாதனை – மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்.!
மொபைல் போன்கள் உற்பத்தியில் இந்தியா, உலகளவில் 2வது பெரிய நாடாக உருவெடுத்துள்ளது – அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
எலக்ட்ரானிக்ஸ் துறையை உலகளாவிய போட்டிக்கு ஊக்குவித்து எலக்ட்ரானிக்ஸ் கருவிகள், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி துறையில் இந்தியாவை உலகளவில் முக்கிய நாடாக மாற்றுவதே எலக்ட்ரானிக்ஸ்-2019 மீதான தேசிய கொள்கையின் நோக்கம் என்பதை அறிவீர்களா? என்று மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் மின்னணு பொருட்கள் உற்பத்தி ஊக்குவிப்புடன், AtmaNirbharBharat திட்டத்தை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் ஹார்டுவேர் உற்பத்திக்கு அதிகளவிலான ஊக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது மேக் இன் இந்தியா திட்டத்தின் முக்கிய தூணாக உருவெடுத்துள்ளது. AtmaNirbharBharatக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார் என்றும் இதற்காக இந்தியாவில் பலமான உற்பத்தி சூழலை அரசு உருவாக்கி வருகிறது என்றும் தெரிவித்துள்ளார். இது, இந்தியாவில் மின்னணு பொருட்கள் உற்பத்தி கடந்த 2014-15ம் ஆண்டு, ரூ.1,90,366 கோடியிலிருந்து, 2018-19-ல், ரூ.4,58,006 கோடியாக அதிகரிக்க உதவியது என கூறினார்.
இந்தியா மொபைல் போன் உற்பத்தியில் சாதனை படைத்துள்ளது. மொபைல் போன்கள் உற்பத்தியில் இந்தியா, உலகளவில் 2வது பெரிய நாடாக உருவெடுத்துள்ளது. கடந்த 2019-20ம் ஆண்டில் மொபைல் போன்கள் உற்பத்தி சுமார் 33 கோடியாக அதிகரித்துள்ளது என்று இந்தியாவில் மின்னணு பொருட்கள் உற்பத்தி மேம்பாட்டுக்கு 3 புதிய திட்டங்களை தொடங்கி வைத்து மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.