மாஸ்டர் தீபாவளிக்கு ரிலீஸ் கிடையாது.!
மாஸ்டர் தீபாவளிக்கு ரிலீஸ் கிடையாது அதிர்ச்சியில் ரசிகர்கள்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்து முடித்திருக்கும் திரைப்படம் மாஸ்டர் இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடித்திருக் கிறார், மேலும் நடிகை ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு, போன்ற பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்,
மேலும் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை சேவியர் பிரிட்டோ நிறுவனம் தயாரித்துள்ளது, இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது, இந்த நிலையில் மேலும் படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் 9 ம் தேதி வெளியவிருந்த இந்த படம் கொரனோ வைரஸ் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி சென்றுள்ளது. மேலும் இந்த திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு மாஸ்டர் படத்தின் டிரைலர் வெளியாகும் என்று கூறப்படுகிறது,மேலும் தற்பொழுது மாஸ்டர் படத்தை தீபாவளிக்கு வெளியாகாது என்றும் அதற்கு முன்னே வெளியாகிவிடும் என்று கூறப்படுகிறது.