யார் இந்த சீனாவின் ஓநாய் வீரர்கள்.? ஆயுதமின்றி எவ்விதமான போர் நிகழ போகிறது!?
இணையம் வாயிலாக மற்றநாடுகளுக்கு எச்சரிக்கை விடும் ஓநாய் படைகளை சீன அரசு களமிறக்கியுள்ளதாம். அமெரிக்கா போன்ற சீனாவை எதிர்த்து நடவடிக்கைகள் மேற்கொள்ளும் நாடுகளை சமாளிக்கவே இந்த ஓநாய் வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா விவகாரத்திற்கு முன்னர் இருந்தே சீனா – அமெரிக்கா இடையே வர்த்தக ரீதியிலும்,மற்ற வகைகளிலும் பிரச்சனை இருந்து வந்தன. தற்போது கொரோனா பரவல் தொடர்பாக சீனா , அமெரிக்கா நாட்டை மட்டுமின்ற மற்ற சில நாடுகளையும் பகைத்து வருகிறது.
தற்போது சீனா, இந்தியாவின் லடாக் பகுதியில் எல்லை பங்கீட்டு பிரச்சனையில் ஈடுபட்டு வருக்குறது. லடாக் பகுதியில் உள்ள இந்தியா சீனா எல்லையில், இருநாட்டு வீரர்களும் அதிகளவில் குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும், விமான படைகளும் தயார் நிலையில் உள்ளதால், இந்திய – சீன எல்லைப்பகுதியில் போர் பதற்றம் அதிகமாக இருக்கிறது.
இந்நிலையில், பல்வேறு நாடுகளுடான பிரச்சனைகளை சமாளிக்க சீன அரசு தற்போது ஓநாய் படைகளை களமிறக்கியுள்ளதாம். இந்த ஓநாய் படை வீரர்கள் நேரடியாக களத்தில் இறங்கி சண்டையிடபோவதில்லை. மாறாக இணையம் வாயிலாக மற்றநாடுகளுக்கு எச்சரிக்கை விடும் படை ஆகும்.
இவர்கள் அந்நாட்டில் இருக்கும் போலி இணைய பக்கம் கிடையாது. மாறாக அரசே இந்த ஓநாய் படையில் வேலையாட்களை நியமிக்கும்.
இந்த ஓநாய் வீரர்கள், மற்ற நாடுகளுடனான போர் ஒப்பந்தங்கள், மற்றும் மிரட்டல்களை செய்ய உள்ளார்களாம்.
இந்த ஓநாய் படையில் சீனாவின் முன்னாள் உளவுத்துறை அதிகாரிகள், ராணுவத்தில் பணியாற்றிய மேஜர், பத்திரிக்கையாளார்கள், அரசியல் விமர்சகர்கள் என பலர் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.
இந்த ஓநாய் படை வீரர்களின் முக்கிய வேலையே ஒரு நாட்டை அவமானப்படுத்துவதுதான். அதாவது, தங்களுக்கு (சீனாவுக்கு) எதிராக செயல்படும் நாடுகளை இகழ்ந்து பேசுவது, அந்த நாட்டை வெளிப்படையாகவே மிரட்டும் தொனியில் ரகசியங்களை வெளியிட போவதாக கூறுவது, அந்நாட்டின் முக்கிய தகவல்களை வெளியிட போவதாக கூறுவது, ஓநாய் வீரர்களின் முக்கிய பணி ஆகும்.
அண்மையில், இந்தியாவிடமே, எங்கள் நாட்டுடன் (சீனா) போர் ஏற்பட்டால் பெரிய இழப்பு உங்களுக்குதான் என மிரட்டும் தொனியில் சீனா கூறியுள்ளதாம். இதுவும் சீனாவின் ஓநாய் வீரர்களின் வேலைதான் என கூறப்பட்டு வருகிறது.