மகனுக்கு பிறந்தநாள் பரிசாக காண்டம் கொடுத்த அம்மா
ஆஸ்திரேலியாவில் உள்ள தாய் ஒருவர் தனது மகனுக்கு ஆணுறை உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய “டீன் ஏஜ் எமர்ஜென்சி கிட்”-டை பிறந்தநாள் பரிசாக வழங்கியுள்ளார்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த செபி என்ற பெண்மணியின் மகன் ஜேம்ஸ். இவர் இப்போது தனது 13-ஆவது பிறந்த நாளில் அடியெடுத்து வைக்கிறார். இவ்வளவு நாள் குழந்தை என்ற நிலைமை மாறி தற்போது டீன் ஏஜில் அடியெடுத்து வைக்கும் தனது செல்ல மகன் ஜேம்ஸ்-க்கு, டீன் ஏஜ் எமர்ஜென்சி கிட்டை பரிசாக வழங்கினார் செபி. அந்த ‘கிட்’டில் ஆணுறை, ரேஷர், ஷவர் ஜெல், தலைமுடிக்கு தேய்க்கும் ஜெல், பணம் உள்ளிட்ட பொருட்கள் இடம் பெற்றுள்ளன. இதுகுறித்து அவர் கூறும்போது, இனி வரும் காலங்களில் என் மகனுக்கு இது போன்ற பொருட்கள் அத்தியாவசியமாக தேவைப்படும். அதனால் தான் கொடுத்தேன் என கூறியுள்ளார். அத்யாவசியமான விஷயங்களை குழந்தைகளுக்கு கற்பிப்பது நமது கடமை என்றும் அவர் கூறியுள்ளார்.