பிரதமருக்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக முதல்வர் கடிதம்!
பிரதமருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார்.இது தொடர்பாக முதல்வர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறை குழுவை அமைக்க வேண்டும்.காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மவுனம் சாதிப்பதால் தமிழக மக்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். ஏற்கனவே 4 வாரங்கள் ஆனதால் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும். மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு பிரதமர் வலியுறுத்த வேண்டும். இவ்விவகாரத்தில் பிரதமரின் உடனடி நடவடிக்கையை எதிர்பார்க்கிறோம் எனக் கூறியுள்ளார். இதுமட்டுமின்றி தமிழக சட்டசபையில் இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நகலையும், கடிதத்துடன் இணைத்து பிரதமருக்கு முதல்வர் அனுப்பியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு மவுனம் சாதிப்பதால் தமிழக மக்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் பிரதமரின் உடனடி நடவடிக்கையை எதிர்பார்க்கிறோம்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.