அமுல் பேபி போன்று ஐ பட நடிகையின் மகன்.!

ஐ பட நடிகையான எமி ஜாக்சன் மற்றும் அவரது மகனின் அழகான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
எமி ஜாக்சன், இவர் ஒரு மாடல் மட்டுமில்லாமல் இங்கிலீஷ் நடிகையும் கூட. இவர் ஏ. எல். விஜய் இயக்கத்தில் வெளியான மதராசப்பட்டினம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து, விக்ரமுடன் ஐ என்ற படத்தில் நடித்து தனக்கென்று இடத்தை தமிழில் பதித்தார். கடைசியாக ரஜினியின் 2.0 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
இதனையடுத்து, இவர் ஜார்ஜ் பனாயோட்டா என்பவரை கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர், இவருக்கு ஆண்ட்ரியாஸ் என்ற ஆண் குழந்தை பிறந்தது. வழக்கமாக மகனுடன் உள்ள அழகான புகைப்படங்களையும், ஸ்டைலிஷ் புகைப்படங்களையும் வெளியிடும் இவர் தனது மகனுடன் உள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அமுல் பேபி போன்று பார்ப்பவர்கள் கண் வைக்கும் அளவிற்குள்ள அவரது மகனின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!
April 29, 2025
சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!
April 29, 2025