மாணவி ஒருவருக்காகவே 70 பேர் செல்லும் படகை இயக்கிய கேரள அரசு.. ரூ. 18 மட்டுமே கட்டணம்!

Default Image

கேரள மாநிலத்தில் தேர்வெழுதும் மாணவி ஒருவருக்காக, 70 பேர் பயணிக்கக்கூடிய படகு இயக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, அவள் சென்று வர ரூ.18 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

கேரளா மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் கரிஞ்ஞம் பகுதியை சேர்ந்த மாணவி சண்டிரா பாபு. 17 வயதற்காகும் இவர், ஆலப்புலா எம்.என். பிளாக். SNDP பள்ளியில் +1 தேர்வினை எழுதவிருந்தார். அங்கு படகில் செல்ல அரைமணிநேரம் ஆகும். தனிப்படகில் பயணித்தால் ரூ.4000 வரை செலவாகும் என தெரிவித்தார்.

ஆனால் அவள் வீட்டில் அந்தளவு வசதி இல்லாத நிலையில், மாநில நீர்வழிப் போக்குவரத்து துறையை அணுகினார். தான் பரிட்சை எழுத வேண்டும் எனவும், பள்ளிக்கு போய்வர டிக்கெட் கட்டணமாக ₹18 மட்டுமே தர முடியும் எனவும், தனக்காக போட் சர்வீஸ் நடத்த முடியுமா? என கேட்டார். இந்த விஷயம், அம்மாநில மந்திரி வரை போனது.

Kerala Water Transport Department Plies 70-Seat Boat To Help 17-YO ...

இந்நிலையில், அந்த மாணவி தேர்வு எழுத 70 பேர் பயணிக்கும் வகையிலான படகு சர்வீஸ் இயக்கப்பட்டது. அந்த படகு, காலை 11.30 கிளம்பி, மாணவியை பள்ளி வாசலுக்கு அருகில் 12.00 மணிக்கு இறங்கிவிடும். மேலும், அந்த மாணவிக்காக அங்கேயே காத்திருந்து மாலை 4 மணிக்கு அவளை தனது வீட்டிற்க்கே அழைத்து சென்றது.

அதுமட்டுமின்றி, அந்த மாணவி சென்றுவர மொத்தமாக ரூ.18 மட்டுமே வசூலிக்கப்பட்டது. மேலும், அந்த மாணவி சென்ற படகை இயக்க 5 தொழிலாளர்கள் பணிபுரிந்தது கூறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்