என்னை அறிந்தால் 2 வில் மாஸ்டர் வில்லன்கள்.?
விஜய்சேதுபதி மற்றும் அர்ஜுன் தாஸிடம் பேச்சு வார்த்தை நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்தத்து இந்த வெற்றியை தொடர்ந்து அஜித் தனது 60 வது படமான வலிமை படத்தில் நடித்து வருகிறார், இந்நிலையில், நடிகர் அஜித் மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் இதனையடுத்து, இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க, இயக்குனர் வாசுதேவ் மேனன் தயாராக உள்ளதாகவும், நடிகர் அஜித்தின் அழைப்பிற்காக காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த இரண்டாம் பாகத்தில் அருண் விஜய் கதாபாத்திரம் கிடையாதாம் மேலும் வில்லனாக விஜய்சேதுபதி மற்றும் அர்ஜுன் தாஸிடம் பேச்சு வார்த்தை நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.