தமிழக மாதவழிபாட்டு தலங்கள் திறக்கப்பட விரைவில் நடவடிக்கை – செல்லூர் ராஜா!

தமிழகம் முழுவதுமுள்ள மத வழிபாட்டு தலங்களை திறக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் வாழ்வாதாரமின்றி தவித்து வரும் நிலையில், மதுரை மேலப்பெருமாள் வீதியில் மக்களுக்கு அத்தியாவசிய உணவுகளை வழங்கிய கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
அப்பொழுது பேசிய அவர், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாதவழிபாட்டு தலங்களையும் திறக்கும்படியான கோரிக்கை முதலமைச்சர் பார்வைக்கு கொண்டு செல்லப்படும் என கூறியுள்ளார். அதிமுக அரசின் ஆட்சியை தவறாகவே திமுக சமூக வலைத்தளங்களில் சித்தரிப்பதாக கூறிய அவர், மக்களின் பாதுகாப்புக்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் கூறியுள்ளார்.