பொன்மகள் வந்தாள் படத்தினை பார்த்து விட்டு அசந்த தல அஜித்.!
ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தினை பார்த்து விட்டு தல அஜித் போனில் பாராட்டி வாழ்த்துக்கள் கூறியுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
2 டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குனரான ஜே. ஜே. பிரட்ரிக் இயக்கும் திரைப்படம் பொன்மகள் வந்தாள். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜோதிகா வழக்கறிஞராக நடித்துள்ளார். மேலும் பாக்கியராஜ், பிரதாப் போத்தன், பார்த்திபன், தியாகராஜன், பாண்டியராஜன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
மேலும் சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.பல்வேறு பிரச்சனைகளை கடந்து சமீபத்தில் பொன்மகள் வந்தாள் திரைப்படம் அமேசான் பிரேமில் வெளியாகியது.
தற்போது வீட்டில் முடங்கிக் கிடக்கும் பிரபலங்களிலிருந்து சாதாரண மக்கள் வரை படத்தை பார்த்து விட்டு தங்கள் கருத்துக்களை கூறி பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்ற பொன்மகள் வந்தாள் படத்தினை தல அஜித் அவர்கள் பார்த்து விட்டு ஜோதிகாவிற்கு கால் செய்து பாராட்டியுளளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆம், ஜோதிகாவிற்கு போனில் கால் செய்து, நேர்கொண்ட பார்வை படத்தை மிஞ்சிட்டீங்க, இதெல்லாம் சரி இல்லை ஜோ என்றும், படம் எனக்கு ரொம்பவே பிடித்து விட்டது என்றும், நீங்க நடிப்பில் சும்மா பின்னிட்டீங்க என்றும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் மேலும் இந்த படத்தை தயாரிக்க சூர்யா எடுத்த முடிவு துணிச்சலானது என்றும், மிக்க மகிழ்ச்சி என்றும், இயக்குநருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றும் அஜித் அவர்கள் கூறியுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.