சினிமா கலைஞர்களுக்கு தனது உதவி கரத்தை நீட்டிய பிரபல பாலிவுட் நடிகர்.!

Default Image

வறுமையில் வாடும் 1500 சினிமா கலைஞர்களுக்கு பிரபல பாலிவுட் நடிகரான அக்ஷய் குமார் நிதியுதவி வழங்கி உதவியுள்ளார். 

கொரோனா தொற்றால் உலக நாடுகள் பல்வேறு வகையில் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.  மேலும் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டதன் மூலம் திரைப்படதுறை ஊழியர்களின் வாழ்வும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. இதனால் பல பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையையும், அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உதவி வருகின்றனர்.

இந்த நிலையில் பாலிவுட் நடிகரான அக்ஷய் குமார்  படப்பிடிப்புகள் இல்லாமல் வறுமையில் வாடும் 1500  சினிமா கலைஞர்களின் வங்கி கணக்கில் ரூ. 3,000 வீதம் 48 லட்சம் வரை செலுத்தி உதவியுள்ளார். இவர் ஏற்கனவே மும்பை காவல்துறை அறக்கட்டளைக்கு ரூ. 2கோடி நிதியுதவியும், மும்பை மாநகராட்சிக்கு ரூ. 3 கோடியும் வழங்கி உதவியது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பலருக்கு உதவி செய்து வரும் அக்ஷய் குமார் அவர்களை பலர் பாராட்டி வருகின்றனர். இவர் தற்போது ராகவா லாரன்ஸின் காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக்கான லெக்ஷ்மி பாம் படத்தில் நடித்து வருகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்