2018 தமிழக பட்ஜெட்:பட்ஜெட்டால் தமிழகத்தின் கடன் சுமை அதிகரிக்கும்!
பாமக நிறுவனர் ராமதாஸ் அதிமுக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டால் தமிழகத்தின் கடன் சுமை அதிகரிக்கும் என குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழக பட்ஜெட் குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், துவரை, உளுந்து, பச்சைப்பயறு ஆகியவற்றை அரசே கொள்முதல் செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது நல்ல திட்டம் என்றும், கொள்முதல் செய்யப்படும் பருப்பு வகைகளை கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் மக்களுக்கு மலிவு விலையில் விற்பனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
வரும் ஆண்டில் மது மூலமாக வருவாய் அதிகரிக்கும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதால், கூடுதலாக மதுக்கடைகளை திறக்க அரசு திட்டமிட்டிருப்பது உறுதியாகியுள்ளதாகவும், அதை பாமக முறியடிக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல அதிமுக அரசால் முடியாது என்பது நிதிநிலை அறிக்கை மூலம் மீண்டும் நிரூபணமாகியுள்ளதாகவும் ராமதாஸ் கூறியுள்ளார்.
தமிழக அரசின் 2018-19-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்சரமான ஓ.பன்னீர்செல்வம் பேரவையில் இன்று தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.