தமிழகத்தில் கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும் – மருத்துவ நிபுணர் குழு
தமிழகத்தில் கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும் மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா வைராஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் பொதுமுடக்கம் நாளையுடன் முடிவடைய இருக்கும் நிலையில், மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
இந்நிலையில், தாமிழகத்தில் கொரோனா பேராவல் சமூகத் தொற்றாக மாறவில்லை. ஆனால், கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று மருத்துவக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் அவர்கள் கூறுகையில், பரிசோதனையை அதிகப்படுத்துவதன் மூலம் இறப்பு விகிதத்தை குறைக்க முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.