சமையல் அறையில் எப்பவும் சுத்தம் செய்ய வேண்டிய இடங்கள் இது தான்.!
சமையலறையில் தினந்தோறும் சுத்தம் செய்யப்பட வேண்டிய சில விஷயங்களைப் பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம்.
இப்போ உள்ள சூழ்நிலையில் சுத்தம் என்பது எவ்வளவு முக்கியம் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். தனி மனித சுகாதாரம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு ஒவ்வொரு வீட்டின் சுத்தமும் முக்கியம். குழந்தைகள், முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் என நிறய நபர் நமது வீடுகளில் இருப்பார்கள். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவரை எளிதில் நோய் தாக்கும் அச்சம் இருப்பதாலேயே சுகாதாரத்தை பேணுவது அவசியம் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
ஒரு வீட்டின் சமையறை என்பது எல்லா அறைகளை காட்டிலும் கொஞ்சம் முக்கியத்துவம் நிறைந்து காணப்படும.முக்கியமாக உணவு இல்லாமல் யாரும் இருக்க முடியாது உன்மைதானே. எனவே அந்த சமையறையில் கிருமிகள் இருக்க இடம் கொடுக்க கூடாது. அப்படி இருந்தால் அவற்றின் மூலம் ஒட்டுமொத்த குடும்பமும் பாதிக்ககூடும். அதனால் தான், சமையலறையை தினமும் சுத்தம் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள்.
சமையறையில் உள்ள பாத்திரம் கழுவும் தொட்டிக்கு கீழ் உள்ள துவாரங்கள் மற்றும் வடிகால்கள் குழாய்கலில் கிருமிகள் அதிகமாக தங்கப்படுகிறது. பொதுவாக ஊர்ந்து செல்லும் பூச்சிகள் மற்றும் கரப்பான் பூச்சிகள் வடிகால் வழியாக வந்து உணவு பாத்திரங்கள் மற்றும் சமையலறை பாகங்கள் போன்றவற்றையில் வந்து விளையாட தொடங்கினால் நமக்கு ஆபத்து. அதனால் தொட்டியின் கீழே உள்ள பகுதியை சுத்தம் செய்வது மிகவும் அவசியம்.
மேலும் அந்த இடத்தை தொற்றுநோய்கள் மற்றும் நோய்க்கிருமிகள் பெருகாமல் பார்த்துக் கொள்ள முடியும். எனவே, தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு, ஒரு கிருமிநாசினி கரைசலைக் கொண்டு அந்த பகுதியை சுத்தம் செய்வதை நமக்கு நல்லது. சமையலறை அடுக்குகள் பெரும்பாலும் அதிகம் பயன்படுத்தப்படும் பகுதிகளில் ஒன்று சமையலறை அடுக்குகள். அதை நாம் தண்ணீரில் துடைக்கும் போது ஸ்லாப் சுத்தமாகத் தோணலாம்.
கிருமிகள் மற்றும் தொற்றுநோய்கள் உருவாகுவதைத் தடுக்க இந்த உபகரணங்களை தவறாமல் சுத்தம் செய்வது முக்கியமானது. ஒரு கிண்ணம் தண்ணீரில் பாதி எலுமிச்சை வைத்து அவற்றை சுத்தம் செய்யலாம். அடுப்பை அணைத்து இந்த எலுமிச்சை நீரில் சுத்தம் செய்யவும். ஆனால் கிருமிநாசினி ஏன் பயன்படுத்துகிறோம் என்றால் கிருமிகள் இல்லாதவை என்பதை உறுதி செய்வதற்கான சிறந்த வழியாகும்.