ஜி. வி – யின் ஜெயில் படத்தின் புதிய அப்டேட்.!

ஜி .வி .பிரகாஷ் நடிக்கும் ஜெயில் படத்தின் காத்தோடு பாடல் விரைவில் வெளிவரும் என்று கூறியுள்ளார் .
இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜி. வி. பிரகாஷ் தற்போது கமல் பிரகாஷின் காதலிக்க நேரமில்லை படத்திலும், வசந்தபாலன் இயக்கத்தில் ஜெயில் படத்திலும் கமிட்டாகியுள்ளார். மேலும் இசையமைப்பாளராக சூரரை போற்று, வாடிவாசல், தனுஷின் 43வது படத்தையும் தன் கைவசம் வைத்துள்ளாராம்.வழக்கமாக தான் இசையமைக்கும் பாடல்களை குறித்த தகவல்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடுவார். இந்த நிலையில் அவர் நடித்து முடித்து வெளியாகவிருக்கும் ஜெயில் படத்தின் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கிரிக்ஸ் சினி கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரிப்பில் உருவாகும் திரைப்படம் ஜெயில். இந்த படத்தில் ஜிவி நடித்து இசையமைத்துள்ளார். இந்த படத்தில் படத்திலுள்ள ‘காத்தோடு’ என்ற பாடலை தனுஷ் பாடியுள்ளதாகவும், அதனை கபிலன் எழுதியுள்ளதாகவும், விரைவில் அந்த பாடல் வெளிவரும் என்றும் கூறியுள்ளார். மேலும் சூர்யாவின் சூரரை போற்று படத்தின் புதிய 3 டிராக்குகள் விரைவில் வெளிவருவதாகவும் கூறியுள்ளார். அது மட்டுமின்றி தனுஷின் 43வது படத்தின் பின்னணி இசை பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும்,, இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை மிகப் பெரிய அளவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
How about the #jail single soon … #kaathodu sung by @dhanushkraja @aditiraohydari @KaviKabilan2 …. excited ???? … updates soon …
— G.V.Prakash Kumar (@gvprakash) May 28, 2020