2018 தமிழக பட்ஜெட்:ரூ. 10 கோடி மாற்றுத்திறனாளிகளுக்கான நிதியம் ஒதுக்கீடு!
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மாநில அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான நிதியம் ரூ. 10 கோடி ஒதுக்கீட்டில் உருவாக்கப்படும் என்று பட்ஜெட்டில் து\ கூறினார்.ரூ. 13 கோடி செலவில் 2000 பயனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட நகரும் வண்டிகள் வழங்க அனுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தமிழக அரசின் வருவாய் ரூ. 1.81 லட்சம் கோடி,செலவு ரூ. 2. 04 லட்சம் கோடி, பற்றாக்குறை ரூ. 23 ஆயிரத்து 176 கோடி என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.