உயிர் பிழைத்தவர்களையும் பேச ஊக்குவிக்கும் படம்.!

Default Image

சிறந்த நோக்கம் மற்றும் அருமையான தயாரித்தலுக்கு பிரட்ரிக் மற்றும் குழுவிற்கு எனது வாழ்த்துக்கள் என்றும் கூறியுள்ளார்.

2 டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குனரான ஜே. ஜே. பிரட்ரிக் இயக்கும் திரைப்படம் பொன்மகள் வந்தாள். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜோதிகா வழக்கறிஞராக நடித்துள்ளார். மேலும் பாக்கியராஜ், பிரதாப் போத்தன், பார்த்திபன், தியாகராஜன், பாண்டியராஜன் ஆகியோரும் முக்கிய கதாபாத் திரத்தில் நடிக்கின்றனர்.   சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.பல்வேறு பிரச்சனைகளை கடந்து தற்போது இந்த படம் நாளை  ஓடிடியில் வெளியாகவுள்ளது. 

இந்த நிலையில் தற்போது உலகளவில் ஓடிடியில் வெளியிடுவதற்கு முன்பு பல பிரபலங்களுக்காக  முன்னோட்டம் ஒன்று நடைபெற்றது. அதன் மூலம் பல பிரபலங்கள் பொன்மகள் வந்தாள் படத்தை பார்த்து பாராட்டி வரும் நிலையில், 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் சிறிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு வெற்றியடைந்த திரைப்படம் சில்லுக்கருப்பட்டி. இந்த படத்தின் இயக்குனர் பொன்மகள் வந்தாள் படத்தினை பார்த்து விட்டு கூறியதாவது, நான் பொன்மகள் வந்தாள் படத்தின் ஆன்லைன் பிரீமியர் ஷோவை பார்த்தேன் என்றும், நீதிமன்றத்தில் நடந்த அந்த காட்சியால் உணர்ச்சிவசப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

வெண்பாவை நடிக்கும் ஜோ மாம் தன்னை ஜோதிகா மற்றும் அவரது மகளின் இடத்தில் நிறுத்தி ‘தி ஜோதிகா கேஸை’ எதிர்த்து போராடுவது தன்னை பிரமிக்க வைத்ததாகவும்,  இது ஒரு முக்கியமான படம் என்றும், மேலும் பாதிக்கப்பட்டவர்களையும், உயிர் பிழைத்தவர்களையும் பேச ஊக்குவிக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும் சிறந்த நோக்கம் மற்றும் அருமையான தயாரித்தலுக்கு பிரட்ரிக் மற்றும் குழுவிற்கு எனது வாழ்த்துக்கள் என்றும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்