மீண்டும் புல்வாமாவில் தீவிரவாத தாக்குதல் – முறியடித்த இந்திய பாதுகாப்பு படை.!

Default Image

தொடர்ந்து காஸ்மீரில் புல்வாமா பகுதியில் தீவிரவாத தாக்குதல் முயற்சி முறியடுக்கப்பட்டுள்ளது. 

காஸ்மீரில் நேற்று சோதனை சாவடி ஒன்றில் பாதுகாப்பு படைவீரர்கள் பரிசோதனை நடத்திக்கொண்டிருந்த போது, அந்த பகுதியில் வந்த வாகனங்களை ஒன்று ஒன்றாக சோதனையிட்டு கொண்டிருந்தனர். அப்போது வெள்ளை நிற கார் ஒன்றை ஒட்டி வந்த சந்தேகத்திற்கு இடமான ஓட்டுநர், அவர்களை தாண்டி செல்ல முயற்சிருக்கிறார். அப்போது அவரை பாதுகாப்பு படை வீரர்கள் தடுத்து இருக்கிறார்கள். அந்த காரை ஒட்டி வந்த ஓட்டுநர் உடனடியாக அந்த இடத்திலேயே நிறுத்திவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

அந்த சமயத்தில் ஏன் அப்படி நடந்தது என்று காரை பரிசோதனை செய்தபோது, அதில் 20 கிலோ அளவில் வெடிகுண்டுகள் மற்றும் வெடி மருந்துகள் இருந்ததை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஐ.இ.டி என்று சொல்லப்படும் Improvised explosive device என்பதால் மீண்டும் ஒருவரை புல்வாமாவில் தற்கொலை படை தாக்குதல் போல காரில் வெடிகுண்டுகளை நிரப்பி தாக்குதல் நடத்தி, அதன்மூலமாக பாதுகாப்பு பட வீரர்களை கொல்ல முயற்சி நடந்திருக்கிறது என்று பாதுகாப்பு படை வீரர்களுக்கு தெரியவந்தது.

இதனிடையே சென்ற வருடம் பிப்ரவரி மாதத்தில் இதுபோன்று நடந்ததில் தான் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் அந்த இடத்தில உயிரிழந்தனர். அதைத்தொடர்ந்து மருத்துவமனையில் மேலும் பலர் உயிரிழக்க நேரிட்டது. ஆகவே, நேற்று அந்த வாகனத்தை மிகவும் பாதுகாப்பாக சோதனை செய்து, உடனடியாக அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அனைவரையும் அப்புறப்படுத்தி வாகனத்தை வெடிகுண்டு நிபுணர்கள் மூலமாக செயலிழக்க செய்ய வேண்டும் என்று முயற்சி செய்தனர். ஆனால், வாகனத்தை அங்கிருந்து நகர்த்தினால் வெடித்துவிடுமோ அச்சம் ஏற்பட்டதால், அந்த வெடிகுண்டுகள் மற்றும் வாகனத்தை அதே இடத்திலேயே வைத்து வெடிக்க செய்தனர்.

இந்த சம்பவத்தில் எந்தவித சேதமும் இன்றி இந்த தீவிரவாத தாக்குதல் முறியடிக்கப்பட்டது. LET – JEM போன்ற தீவிரவாத அமைப்புகள் பாகிஸ்தானில் உள்ளவர்களுடன் சேர்ந்து சாதி செய்து இந்த தீவிரவாத தாக்குதலை நடத்த முயற்சி செய்திருப்பதாக தீவிரவாத அமைப்புகளிடம் உளவு நடத்தும் பாதுகாப்பு படை வீரர்களிடம் இருந்து தகவல் கிடைத்துள்ளது. ஆகவே, சென்ற வருடம் போலவே இந்த வருடமும் தாக்குதல் நடத்த செய்யப்பட்ட முயற்சி தற்போது முறியடிக்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live today update
ed chennai high court
Nainar Nagendran and cm
mumbai indians rohit sharma
PutraHeight Malaysia Fire
street dogs
csk Ashwani Kumar