#Breaking: மாஞ்சா நூல் பட்டம் விட்டால் குண்டர் சட்டம் பாயும்.!
மாஞ்சா நூல் மூலம் பட்டம் விடுபவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர்.
கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். இதற்கிடையே, ஊரடங்கு நேரத்தில் சென்னை மாநகரில் குறிப்பாக வடசென்னை மற்றும் தென் சென்னை பகுதிகளில் மாலை நேரங்களில் ஏராளமானோர் பட்டம் விடும் சம்பவம் தொடந்து வருகிறது. இதனால், ஆங்காங்கே பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
சென்னையில் மாஞ்சா நூல் தயாரிப்பு மற்றும் மாஞ்சா நூலில் பட்டம் விட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி மாஞ்சா நூல் மற்றும் பட்டம் தயாரிக்கும் நபர்கள், பட்டம் விடும் நபர்கள் அனைவரையும் கைது செய்து, அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்று போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், சென்னையில் மாஞ்சா நூல் மூலம் பட்டம் விடுபவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர் என்று மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சென்னையில் மாஞ்சா நூல் பட்டம் விட்ட 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.